Wednesday, January 2, 2008

ரஜினியின் தமிழ்த் தொண்டு..............

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் பற்றிய அவரின் உதவியாளரின் சமீபத்திய அறிவிப்பு எதிர்காலத்திலும் உண்மையாகவே இருக்குமானால் (நம்புவோமாக) அது அவர் தமிழ்ச் சமூகத்திற்கு செய்த (ஒரே) ஒரு நல்ல தொண்டாகும். அவரை இதுவரை ஒரு தெளிவற்ற சிந்தனை கொண்ட மனிதராகவே அவருடைய பேச்சும்/செயல்பாடுகளும் இருந்து வந்திருக்கிற்து. சோ மா(தி)ரி ஆட்களின் பேச்சை கேட்டு திசை தவறி போகாமல் ஒரு தெளிவான முடிவை எடுத்து இருக்கிறார். அவரை அரசியலுக்கு இழுப்பதற்கு சோவும் ஆதிக்கவாத ஊடகங்களும் எவ்வளவோ முயன்று பார்த்தன. ஆனால் மனிதர் வளைந்து கொடுக்கவில்லை. இதற்காக அவருக்கு தமிழர்களாகிய நாம் நன்றி உடைத்தாய் இருக்கிறோம்.

இல்லையேல் திரைத் துறையில் நடித்து (?) முடித்து ஓய்வு எடுத்துக் கொண்டவர்களும், வாய்ப்புக் குறைந்து போன கூத்தாடிகளும், கட் அவுட் வைத்தவனும் போஸ்டர் ஒட்டியவனும் தான் கொள்கை பரப்புச் செயளாளர்களாகவும் அமைச்சர்களாகவும் (ஆட்சிக்கு வந்திருந்தால்) ஆகியிருப்பார்கள். பின்னனியில் இந்த ஆதிக்க சாதியும் அவரை வெற்று புகழ்ச்சி செய்து அவரின் மேல் நன்றாக சவாரி செய்திருக்கும்.

தமிழர்கள் தப்பித்தார்கள்...................

6 comments:

சின்னப் பையன் said...

எங்கள் தங்கத்தலைவர் இன்னும் திரையுலகிலேயே செய்ய வேண்டிய தொண்டுகள் ஏராளமாக பாக்கி உள்ளன. இப்போதுதான் அவர் பேத்தி வயதுடைய ஒருவருடன் டூயட் பாடியுள்ளார். இன்னும் கொள்ளுப் பேத்தி வயதுடைய ஒருவருடன் பாட்டு பாடும் வரை அவர் ஓயமாட்டார். நாங்களும் அவரை ஓயவிடமாட்டோம்.

அதுவரை நாங்கள் கேட்பது ஒன்றே ஒன்றுதான். அவரை அரசியலுக்கு தயவு செய்து கூப்பிடாதீர்கள்.

தடாகம் said...

//ச்சின்னப் பையன் said...

//

ச்சின்னப் பையன் அவர்களே, இப்பதிவிற்கு முதல் ஆளாக வருகை தந்தமைக்கு மிக்க நன்றி.

ORB Raja said...

அரசியலுக்கு வரலயேன்னு சந்தோசப்படறதா இல்ல சினிமாவுல இன்னும் 20 வயசுக் காரன் மாதிரி இம்சையைக் கூட்றாரே அதுக்கு வருத்தப் படறதா??

யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!!

உதயம் said...

(என்னையும் குழப்பி , தமிழகத்தையும் குழப்புவது என் குலத் தொழில்)

நான் ஒரு போதும் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னதில்லை காரணம் அவர் நூறு தடவை சொன்னால் தான் ஒரு தடவை புரியும் அவர் தமிழ் அப்படி, அவரை வைத்து எங்கு அரசியல் நடத்த?.

தடாகம் said...

//தஞ்சாவூரான் said...
அரசியலுக்கு வரலயேன்னு சந்தோசப்படறதா இல்ல சினிமாவுல இன்னும் 20 வயசுக் காரன் மாதிரி இம்சையைக் கூட்றாரே அதுக்கு வருத்தப் படறதா??

யாராவது தெரிஞ்சா சொல்லுங்க!!
//
வருகைக்கு நன்றி தஞ்சாவூரான்...சந்தோஷப்படுங்கள் அரசியலுக்கு வராமல் இருப்பதற்காக..வந்துவிட்டால் நீங்களும் நானும் பாதிக்கப்பட வேண்டி வரும். சினிமா என்றால் பார்க்காமல் இருந்து விடலாம்.

தடாகம் said...

// சோ said...
(என்னையும் குழப்பி , தமிழகத்தையும் குழப்புவது என் குலத் தொழில்)

நான் ஒரு போதும் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னதில்லை காரணம் அவர் நூறு தடவை சொன்னால் தான் ஒரு தடவை புரியும் அவர் தமிழ் அப்படி, அவரை வைத்து எங்கு அரசியல் நடத்த?.
//

வருகைக்கு நன்றி சோ...குழப்பாமல் தெளிவாகச் சொன்னீர்கள்.