அரசியல் கட்சிகள் சுய லாபத்திற்காகவும் குறுகிய நோக்கத்துடன் செயல்படுவதால் தான் நாட்டில் பல நல்ல திட்டங்கள் செயல் படுத்த முடியாமல் போய் விடுகின்றது. சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து அதிமுக பொதுக்குழுவின் தீர்மானம் தமிழரல்லாத "ஜெ"வினால் தமிழ் தொண்டரடி பொடிகளின் உதவியுடன் தமிழ்நாட்டுக்கு செய்த பல துரோகங்களின் வரிசையில் இன்னொன்று. எதிர்க்க்ட்சிகள் என்றால் திட்டங்களை "எதிர்க்கும்" கட்சிகள் என்று நமது அரசியல் கட்சிகள் பொருள் கொண்டுவிட்டதில் வியப்பேதும் இல்லை. அவர் அதை ஆதரித்து தீர்மானம் நிறைவேற்றினால் இருந்தால் தான் நமக்கெல்லாம் வியப்பாக இருந்திருக்கும்.
இங்கே இப்படியிருக்க, சீனாவிலே பீஜிங்கிற்கும் திபெத் தலைநகர் லாசாவிற்கும் இடையே ரயில் போக்குவரத்தை துவக்கி இருக்கிறார்கள் சீனர்கள், விந்தை என்னவென்றால் திபெத் 16,000 அடி உயரத்தில் இருக்கின்றது. அந்த உயரத்தை அடைய அவர்கள் 240 மைல்gaL பனிப்பாறைகளுனூடே (Permafrost) ரயில் பாதை அமைத்து இருக்கிறார்கள். இது சீனர்களின் அறிவியல் வளர்ச்சியை காண்பிக்கின்றது.
சீனர்களின் அறிவியல் வளர்ச்சிக்கு இன்னொரு சான்றாக அவர்களின் Three Gorges Dam திட்டம் இருக்கின்றது. இந்த பிரம்மாண்டமான அணை "யாங்சே" நதியில் கட்டப்பட்டுள்ளது. இதனின் அகலம் 1 1/2 மைல்களும், உயரம் 600 அடி, நீள்ம் 400 மைல்கள். ஆண்டுதோறும், இந்நதியின் வெள்ளப்பெருக்ககால் பலத்த சேதமும், உயிரிழப்பும் ஏற்பட்டு வ்ந்ததால் 1919'ல் அணை கட்டுவதற்கான ஆய்வு முதலில் மேற்கொள்ளபட்டது. பின் மீண்டும் 1950;ல் மற்றொரு ஆய்வு மேற்கொள்ளபட்டது. தற்போது இதன் மூலம் உற்பத்தியாகும் (நீர்) மின்சாரம் 18 அனுமின் உலைகளின் உற்பத்தி திற்னுக்கு இனையானது. இத்திட்டம் நவீன சீனாவின் திட்டமிடல் மற்றும் அமலாக்கம் , அறிவியல் ம்ற்றும் தொழிற் வளர்ச்சிக்கான ஒரு சான்றாக இருக்கின்றது.
ஆனால் , நம் இந்தியர்களுக்கு இவ்வளவு பெரிய திட்டங்களை ஒருங்கினைந்து திட்டமிட்டு அமல்படுத்தும் திறன் உள்ளதா எனபது ஐயமே! நமது அறிவு முதிர்ச்சி மதம் ம்ற்றும் ராமரை பற்றி பேசும் அள்விலேயே வளர்ந்து இருக்கின்றது. இதற்கு நமது உச்ச நீதிமன்ற்மும் துனணபுரிந்ததில் வியப்பேதும் இல்லை.
பி.கு: இதனன சில வாரங்களுக்கு முன்பு "இட்லிவடை" யில் பின்னூட்டமாக எழுதியிருந்தேன்.