Monday, January 7, 2008

பொது சுகாதாரம் பற்றிய ஒரு சிந்தனை


பொதுவாக நம்மூர் பேருந்து நிலையங்கள் அருகில் கட்டணக் கழிப்பிடங்கள் இருந்தாலும் நமது மக்கள் பெரிதாக பயண்படுத்துவதில்லை. மாறாக அதற்கு அருகில் வெட்ட வெளிப்பறத்தை தான் அதிகம் பயண்படுத்துகிறார்கள். இதற்கு மிக முக்கிய காரணம் அது "கட்டணக்" கழிப்பிடங்களாக இருப்பது ஒன்று. அவசரத்திற்காக போகும் மக்களிடம் சில்லரை இருப்பதில்லை. இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு வெளிப்புறங்களை பயண்படுத்த நினைப்பதுவும் தான். மேலும் பொது கட்டணக் கழிப்பிடங்கள் சரியாக பராமரிக்கப் படுவதில்லை. தேவையான தண்ணீர் வசதியும் இருப்பதில்லை. இதற்கு நிதி பற்றாக்குறையும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வும் குறைவும் ம்ற்றொரு காரணம் ஆகும். பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டும், நாள்தோறும் பெரு நகரங்களுக்கு வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு செயல்படாது (செயலற்று) இருப்பதுவே காரணம் ஆகும்.

இதற்கான ஒரு தீர்வாக நீர் மற்றும் நிதி ஆதாரங்களை பெருக்குவதும், பொது சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வையும் அதிகரிப்பது, "கட்டண"க் கழிப்பிடங்களை "கட்டணமில்லா" சுகாதாரமான கழிப்பிடங்களாக அதை மாற்றுவதும் என்பது என் கருத்து.

நீர் ஆதாரங்களை பெருக்குவதற்கான ஒரு வழிமுறையாக மழை நீரை சேமிப்பதும், ஏரி மற்றும் குளங்களை ஆழ/அகலப் படுத்துவதும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் தான். மேலும் பெரிய எண்ணிக்கையில் மரக்கன்றுகளை சாலையோரங்கள் மற்றும் தெருவோரங்களிலும், ஏரி மற்றும் குளக்கரைகளிலும் நடுவதுவேமாகும். மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க மரங்கள் வெட்டப்படுவது குற்றமென கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும். இதைப் பற்றிய மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ஊடங்களில் விளக்கமான விளம்பரங்களை வெளியிடுவது, பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டங்களில் ஒரு பாடமாகவும் அது மாணவர்களை முறையாக சென்றடைவதை உறுதிப்படுத்துவதிலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை இதனை செய்ய ஊக்கப்படுவதும், இதை வலியுறுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு (இப்பொழுது உள்ளது போல அல்ல) கேளிக்கை வரியை ரத்து செய்வதும் இருக்கின்ற பல வழிகளில் சில.

நிதி ஆதாரங்களை பெருக்குவதற்கு - "கட்டண"க் கழிப்பிடங்களை "கட்டணமில்லா" சுகாதாரமான கழிப்பிடங்களாக மாற்றுவதற்கும் அதனை சரியாக பராமரிப்பதற்கும், கழிப்பிடங்கள் இல்லாத பொது இடங்களில் புதுக் கழிப்பிடங்கள் அமைப்பதற்கும் லாபகரமாக இயங்கும் தனியார் நிறுவனங்களையும் மற்றும் தொழிற்சாலைகளையும், முக்கியமாக பொது/தனியார்த்துறை வங்கிகளை அதன் கிளைகளின் மூலமாக அக்கிளைகளிலிருந்து குறிப்பிட்ட தூரத்தில் இருக்கும் பொது கழிப்பிடங்களின் பராமரிப்புச் செலவை ஏற்கச்செய்வதின் மூலம் இதனை நிறைவேற்றிட இயலும். அவ்வாறு செய்ய முன்வரும் நிறுவனங்களை அரசு சலுகைகள் அளித்து ஊக்கப்படுவது மற்றவர்களையும் அதனை செய்ய முன்வரத் தூண்டும்.

இதனை செயல்படுத்த மான்புமிகுக்களும் அவர்களின் "செயலற்ற" செயலாளர்களும் முன்வருவார்களா?

No comments: